லஞ்சம் வாங்கி ரூ.800 கோடி சொத்து குவித்த அதிகாரி கைது

காக்கிநாடா: ஆந்திரப் பிரதேசத் தில் போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ஆதி மூலம் மோகன் லஞ்சம் வாங்கி ரூ.800 கோடி சொத்து குவித்ததன் தொடர்பில் கைது செய்யப் பட்டார். ஆந்திர மாநிலம் காக்கி நாடாவைச் சேர்ந்த மோகனின் வீட்டில் இருந்தும் அவரது உறவினர் வீடுகளில் இருந்தும் பலதரப்பட்ட விலையுயர்ந்த கற்கள், வைரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்த மோகனின் 9 வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய சோதனையில் சுமார் ரூ.100 கோடி முதல் ரூ. 120 கோடி வரையிலான சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. ஏராளமான வங்கிப் பெட்டகங்கள் இன்னும் திறந்து பார்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகனின் மகள் பெயரில் 8 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உண்மையில் அப்படி எந்த ஒரு நிறுவனமுமே செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. லஞ்சமாகச் சேர்த்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற போலி நிறுவனத்தை தொடங்கியது கண்டுபிடிக்கப் பட்டது. "ஆதிமூலத்தின் 12 பெட்டகங் களைத் திறந்து சோதனையிட்டதில் தங்க, வைர நகைகள், சொத்துப் பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. தொடர்ந்து ஹைதரா பாத்தில் உள்ள அவரது வங்கிப் பெட்டகம், பினாமிகள் வீடுகளில் சோதனை யிடப்பட்டு வருகிறது," என்றார் லஞ்ச ஒழிப்புப் போலிஸ் டிஎஸ்பி ரமாதேவி. அரசுப் பணியில் சேர்ந்ததில் இருந்து ஏறத்தாழ 25 ஆண்டு களுக்கும் மேலாக அவர் லஞ்சம் வாங்கி கோடிக்கணக்கான சொத்துகளைச் சேர்த்துள்ளார். சொத்துகளைச் சேர்த்துள்ளார். ரூ.120 கோடி சொத்து இருக் கும் என்று கருதி சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு தோண்டத் தோண்ட சொத்துகள் கிடைத்த வண்ணம் இருந்ததைப் பார்த்து மலைப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஏராள சொத்துகளை வாங்கிக் குவித்த ஆதிமூலம் மோகன், விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!