ஈராண்டுகளில் கடத்தப்பட்ட 14,000 இளம்பெண்கள் மீட்பு

புது­டெல்லி: கடந்த இரண்டு ஆண்­டு­களில் பாலியல் நட­வ­டிக்கை­களில் ஈடுபடுத்துவதற்­கா­கக் கடத்­தப்­பட்ட 14,000க்கும் மேற்­பட்ட இளம்பெண்கள் மீட்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மக்­க­ளவை­யில் தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சு­களுக்கு இடை­யி­லான குழு, அனைத்து விதமான மனிதக் கடத்­தல் நட­வ­டிக்கை­களை­யும் தடுக்­கும் விதத்தில் சட்ட நட­வ­டிக்கை­களை வலுப்­படுத்தி வரு­வதாக பெண்கள், குழந்தை­கள் மேம்பாட்­டுத் துறை அமைச்­சர் மேனகா காந்தி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரி­வித்­துள்­ளார். தேசிய குற்ற அறிக்கை பதிவுப் பிரிவு வழங்­கிய தக­வ­லின்­படி, பாலியல் சுரண்ட­லின் கீழ் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்து­வதற்­கா­கக் கடத்­தப்­பட்­ட­வர்­கள் மீட்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் 2014ஆம் ஆண்டில் 4,743 பேரும் 2015ஆம் ஆண்டில் 9,483 பேரும் மீட்கப்பட்டிருப்பதாகவும் மேனகா காந்தி தெரி­வித்துள்­ளார்.

பெண்கள், குழந்தை­கள் மேம்பாட்­டுத்துறை அமைச்சு, 'உஜ்­ஜ­வாலா' என்ற விரிவாக்கத் திட்­டத்­தின் கீழ் பெண்களை பாலியல் குற்­றங்களில் ஈடு­ப­டச் செய்யும் வகையில் கடத்­தப்­படு­வதை தடுப்பதுடன் அவ்­வகையில் கடத்­தப்­பட்­ட­வர்­களை மீட்டு அவர்­களுக்கு மறு­வாழ்­வு வழங்க­வும் பாது­காப்­பான இடத்­தில் அவர்­களைத் தங்கவைத்து புனர்வாழ்வு வழங்கியும் சேவையாற்றி வரு­கிறது. நாட்டின் 234 மாவட்­டங் களி­லும் அனைத்துவிதமான மனிதக் கடத்­தல் தடுப்­புப் பிரிவை­ உள்துறை அமைச்சு ஏற்­படுத்தி உள்ளதாகவும் மேனகா காந்தி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!