100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து அறுவர் பலி

மும்பை: மகா­ராஷ்­டிரா மாநிலம், தெற்கு மும்பை­யின் காமாத்­தி­புரா பகு­தி­யில் மூன்ற­டுக்கு கட்­ட­டம் இடிந்து விழுந்த­தில் ஒரு பெண் உட்பட அறுவர் பலி­யா­கி­னர். ஏறத்தாழ 100 ஆண்­டு­கள் பழமை­யான கட்­ட­டத்தைப் பழு­து­பார்க்­கும் பணிகள் நடை­பெற்று வந்த நிலையில் அக்­கட்­ட­டம் சனிக்­கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. அது­கு­றித்து மீட்புப்பணியில் ஈடு­பட்ட தீயணைப்­புப் படை­யி­னர், "இந்தக் கட்டட விபத்­தில் சிக்கி, அதில் குடி­யி­ருந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்த­னர். உயி­ருக்கு ஆபத்­தான நிலையில் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்ட மற்­றொ­ரு­வர் சிகிக்சை அளித்­தும் பல­னின்றி உயி­ரி­ழந்தார். படு­கா­ய­மடைந்த மேலும் மூவருக்கு தனியார் மருத்­து­வ­மனை­களில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது," என்று கூறினார்.

இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் பார்வை­யிட்ட காமாத்­தி­புரா பகுதி சட்டமன்ற உறுப்பினர் அமீன் படேல் பேசுகையில், "இந்த சம்ப­வம் குறித்து விசா­ரணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது; விபத்­துக்­குள்­ளான கட்­ட­டத்­துக்கு அருகில் உள்ள குடி­யி­ருப்பாளர்களின் பாது­காப்பு கருதி, அவர்­கள் முகாம் ஒன்றில் தங்கவைக்­கப்­பட்­டுள்­ள­னர்," என்று சொன்னார். இத­னிடையே, "காமாத்­தி­புராவில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான விதி­ மீ­றல் கட்­ட­டங்கள் குறித்து விரி வான விசாரணை நடத்த வேண் டும்," என்று மாநில பாஜக வலி­ யு­றுத்­தி­யுள்­ளது.

மும்பை காமாத்திபுராவில் ஏறத்தாழ 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் திடீரென்று இடிந்து அறுவர் உயிரைப் பலிவாங்கியது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன. படம்: இந்தியத் தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!