ஆம் ஆத்மி: ஹெலிகாப்டர் பேர ஊழலில் பாஜகவுக்கும் பங்குண்டு

புது­டெல்லி: அகஸ்டா­வெஸ்ட்­லேண்ட் ஹெலி­காப்­டர் பேர விவ­கா­ரத்­தில் காங்­கி­ரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கறை ­ப­டிந்தவை­தான், ஊழலை ஒழிப்­பேன் என்று பாஜக சூளுரைத்­தது உண்மை­யானால் ஊழலில் ஈடுபட்டவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. அக்கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறும்­போது, "வாஜ்பாய் ஆட்­சிக்­கா­லத்­தில் இந்த ஒப்­பந்தம் தொடங்கப்­பட்­டது. மன்­மோ­கன் சிங் அரசு அதை நிறைவு செய்து, ஒப்­பந்தத்தை ரத்து செய்தது. இதனால்­தான் சோனியா காந்தி மீது மோடி அரசு எவ்வித நட­வ­டிக்கையை­யும் எடுக்­க­வில்லை. மோடி அரசின் நோக்­கங்கள் ஊழலை ஒழிப்­ப­தாக இருக்­கு­மே­யானால், இதில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­ய­வேண்­டும். சோனியா காந்தி, அகமட் படேல் முதல் எஸ்.பி.தியாகி, பிற அதி­கா­ரி­கள், அர­சி­யல்­வா­தி­கள் ஆகி­யோரைக் கைது செய்ய வேண்டும். இதில் சில பத்­தி­ரிகை­யா­ளர்­களும் ஈடு­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது," என்றார்.

இதற்கிடையே, நாடா­ளு­மன்றத்தை முற்­றுகை­யி­டப் போவ தாக நேற்று காங்­கி­ரஸ் கட்சி அறி­வித்­தது. அதனை விமர்சிக்கும் வகை யில் மத்திய அமைச்­சர் வெங்கய்ய நாயுடு ஹெலி­காப்­டர் ஊழலை மறைக்­கும் வகை­யி­லேயே காங்­கி­ரஸ் கட்சி நாடா­ளு­மன்ற முற்­றுகைப் போராட்­டத்தை அறி­வித்­துள்ளது எனக் குற்­றம் சாட்­டினார். "காங்­கி­ரசுக்கு ஹெலி­காப்­டர் ஊழலில் தொடர்­பில்லை என்றால் ஏன் ஒப்­பந்த விலையை ரூ. 3,000 கோடி­யி­லி­ருந்து ரூ. 4,000 கோடியாக உயர்த்த வேண்டும்? சில நிறு­வ­னங்களுக்கு மட்டுமே சலுகை காட்­டி­யது ஏன் போன்ற 10 கேள்­வி­களுக்கு விடை அளிக்க வேண்டும்," என்றார் வெங்கய்ய நாயுடு. இதன் தொடர்பில் நாடா­ளு­மன்றத்­தில் 4-ஆம் தேதி முழு ஆவ­ணங்களை­யும் சமர்ப்பிக்கப் போவதாக இந்தியத் தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!