கொதிக்கிறது தமிழகம்: பத்து நகரங்களில் அனல் வெயில்

கோடை கால வெப்பம் இந்தியாவை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் தமிழ்நாட் டில் இந்த ஆண்டு ஆக அதிக மான வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகமாக அடித்து வருகிறது. இதன் காரணமாக இரவில்கூட வெப்பக்காற்று வீசுகிறது. கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாதத் தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள் ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப் படுகின்றனர். தமிழகத்தின் பத்து நகரங் களில் நேற்று முன்தினம் 38 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப் பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.

இந்தக் கோடையில் கடந்த வாரம் ஆக அதிகமாக வேலூரில் 44 டிகிரி வெயில் பதிவாகி அப் பகுதி மக்களை அனல் வெப்பத்தில் தள்ளியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கரூர் பரமத்தி வேலூரில் 42 டிகிரியும் வேலம், வேலூர் நகரங்களில் 41 டிகிரியும் வெப்பம் பதிவானது. திருச்சி, தருமபுரி, திருப்பத்தூரில் 40.5 டிகிரி, மதுரை 40 டிகிரி, சென்னை, கோவை, பாளையங் கோட்டை நகரங்களில் 39 டிகிரி என வெப்பம் அப்பகுதி மக்களை வாட்டியது. இந்நிலையில் அக்னி நட்சத் திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. மே 28 வரை நீடிக்க இருக்கும் கத்திரி வெயில் காலத்திலும் 38 டிகிரி வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் கணித்து உள்ளது.