‘ஹெலிகாப்டர் பேர ஊழலை விவாதிக்க தயங்குவது ஏன்?’

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு காங்கிரஸ் தயங்குவது ஏன் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங் களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பி­னார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசினார். “நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

ஆனால், நாடாளு மன்றத்தை முற்றுகையிடுவதை அவர்கள் விரும்புகின்றனர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக விவாதிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் தயங்குவது ஏன் என்பதை அறிய விரும்புகிறேன்,” என்று வெங்கய்ய நாயுடு கூறினார். இதற்கிடையே ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்கை விசாரிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா வலியுறுத்தியுள்ளார்.