தனி மாநிலமாக டெல்லியை மாற்ற சட்ட முன்மொழிவு

புதுடெல்லி: சுதந்­திர நாடான பிறகு இந்­தி­யா­வின் மற்ற மாநி­லங்களைப் போல் இருந்த டெல்லி, கடந்த 1956ல் யூனி­யன் பிர­தே­ச­மாக மாற்­றப்­பட்டு, குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் நேர­டிக் கண்­கா­ணிப்­பின் கீழ் கொண்டு வரப்­பட்­டது. இதன்­படி டெல்­லி­யின் காவல் துறை, மாந­க­ராட்­சி­கள் உட்­ப­டப் பல முக்­கிய துறை­கள் மத்­திய அர­சின் நேரடி கண்­கா­ணிப்­பின் கீழ் வரு­கின்றன. இந்தக் கண்­கா­ணிப்­புப் பணியை மத்­திய அரசு சார்­பில் துணை நிலை ஆளு­நர் மேற்­கொண்டு வரு­கிறார். அவர் அவ்­வப்­போது மத்­திய அர­சி­டம் அறிக்கை சமர்ப்­பித்து வரு­கிறார்.

இதனால் டெல்­லி­யில் ஆளும் கட்­சி­யின் சார்­பி­லான முதல்­வர் மற்­றும் மத்­திய அரசு என இரு அதி­கார மையங்கள் உள்­ளன. இவர்­கள் இரு­வேறு கட்­சி­க­ளாக அமை­யும்­போது இரு­த­ரப்­புக்­கும் மோதல் ஏற்­பட்­டுத் தலை­ந­க­ரின் முன்­னேற்­றம் தடை­படு­வ­தாக புகார் நில­வு­கிறது. தற்­போது இந்த வகை மோதல் ஆம் ஆத்மி கட்சி, பார­திய ஜனதா கட்­சி­களிடையே தொடர்­கிறது. டெல்­லியைத் தனி மாநி­ல­மாக மாற்­று­வோம் என்று இரு கட்­சி­களும் தேர்­தல் அறிக்கை­யில் குறிப்­பிட்­டி­ருந்தன. ஆனால் கடந்த ஆண்டு டெல்லி சட்­டப்­பே­ரவைத் தேர்­தல் தோல்­விக்­குப் பின் பாஜக அமைதி காத்து வரு­கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தனது முயற்­சியைத் தொடர்­கிறது. இந்த வகை­யில் டெல்­லியைத் தனி மாநி­ல­மாக மாற்­று­வ­தற்­கான சட்ட முன்மொழிவை அடுத்த வாரம் தயா­ரிக்க இருப்­ப­தாக அம்­மா­நி­லத்­தின் முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் அறி­வித்­துள்­ளார்.

கெஜ்­ரி­வால் தனது திட்­டப்­படி சட்ட முன்­மொ­ழிவைத் தயார் செய்து பொதுமக்­களின் கருத்­து­களை அறிய இணை­யத்தளத்­தில் பதி­வேற்­றம் செய்ய உள்­ளார். பிறகு தனது அமைச்­ச­ரவை­யால் மசோதா ஏற்­கப்­பட்ட பின் அதை சட்டப் பேரவை­யில் தாக்கல் செய்­ய­வி­ருக்­கிறார். இங்கு நிறை­வேற்­றப்­படும் மசோதா ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­படும். பிறகு இதை மத்­திய அரசு நாடா­ளு­மன்றத்­தில் விவா­தித்து நிறை­வேற்ற வேண்டி இருக்­கும். இதற்கு ஏது­வாக குடி­ய­ர­சுத் தலை­வர் மற்­றும் குடி­ய­ரசுத் துணைத் தலை­வர் மாளிகை­கள், பிர­த­மர் அலு­வ­ல­கம், குடி­யி­ருப்­பு­கள், வெளி­நா­டு­களின் தூத­ர­கங்கள் என டெல்­லியை மாநில அர­சாக மாற்ற தடை­யாக உள்ள பகு­தி­களை மத்­திய அர­சின் அதி­கா­ரத்­தி­லேயே விட்டுவிடக் கெஜ்­ரி­வால் முடிவு செய்­துள்­ள­தாகத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!