தமிழக சட்டமன்றத் தேர்தல்: சென்னையில் உச்சகட்டப் பிரசாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலை யில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தீவிரவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தேமுதிக=மக்கள் நலக் கூட் டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் என ஆறு முனைப் போட்டி நிலவு வதால் வெற்றியை அறுவடை செய்ய எல்லாக் கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன. அக்னி நட்சத்திரம் நேற்றுத் தொடங்கியபோதும் வெற்றிபெற வேண்டுமே என்ற தவிப்பில் வறுத்தெடுக்கும் வெயிலையும் கருத்தில் கொள்ளாது கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குக் கேட்டு தங்களது தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடக்கவிருக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றி திமுக=காங். கூட்டணிக்கு வாக்குச் சேகரிக்க உள்ளனர். சுமார் நூறாயிரம் பேர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டத்திற்காக ஐந்தடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக பொருளாளர் ஸ்டாலினும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக திமுக,

காங்கிரஸ் வட்டா ரங்கள் தெரிவித்தன. தமிழகத்திலேயே ஆக அதிகமாக 45 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையிலும் சென்னை ஆர்.கே. நகரில் இன்னும் பிரசாரம் களை கட்டவில்லை என்று சொல்லப்படு கிறது. இத்தொகுதியின் நட்சத்திர வேட்பாளராக தமிழக முதல்வர் ஜெயலலிதா களமிறங்குவதால் அவர் எளிதாக வென்றுவிடுவார் என்பதே இந்த மந்தநிலைக்குக் காரணம் என்பது அதிமுகவினரின் கருத்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!