இந்தியா: பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு; 12 பேர் கைது

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதையொட்டிய மாநிலங்களிலும் அதிரடிச் சோதனை நடத்திய டெல்லி போலிசார், பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த தாக பாகிஸ்தானை மைய மாகக் கொண்ட ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பைச் சேர்ந்த 12 பேரைக் கைது செய்தனர். பயங்கரவாதத் தாக்குதல் கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்று உளவுத்துறையிடம் இருந்து கிடைத்த நம்பகமான தகவல்களை அடுத்து போலிசார் அதிரடி சோதனைகளில் இறங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்தப் பெரிய அளவிலான அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் டெல்லி போலிசின் 12 சிறப்புப் படை யினர் ஈடுபட்டனர். இதில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புடன் தொடர்புடையவர் கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேரைக் கைது செய்த போலிஸ், அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்களை யும் ‘ஐஇடி’ எனப்படும் அதி நவீன வெடிமருந்துச் சாதனங் களையும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட் களையும் கைப்பற்றினர். கிழக்கு கோகுல்புரி வட்டா ரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ‘ஐஇடி’ சாதனத்தை உருவாக்கும் பணி யில் ஈடுபட்டிருந்த இரு இளையர்களை பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு போலிசார் சுற்றி வளைத்தனர்.