பொய் வாக்குறுதிகளை தரும் திமுக, அதிமுக: சீமான் குற்றச்சாட்டு

நாமக்கல்: தேர்தல் பிரசாரத்தின் போது திமுக, அதிமுக சார்பில் பல்வேறு பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல்லில் பிரசாரம் மேற் கொண்ட அவர், கச்சத்தீவை மீட் போம் என இரு கட்சிகளும் கூறி வருவது வெறும் ஏமாற்று வேலை என்றார். "சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றனர். ஆளுங் கட்சியினர் பணம் கொடுப்பதற்கு தயாராகிவிட்டனர். பல இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது," என்றார் சீமான். ஆளுங்கட்சியினருக்கு ஆதர வாக அரசு அதிகாரிகள் செயல் படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், வாக்களிக்க பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

"மக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கையோடு எங் களைப் பார்க்கின்றனர். "கச்சத்தீவை மீட்போம் என்பது வெறும் ஏமாற்று வேலைதான். அதை பிறகு பார்ப்போம். அதற்கு வேறு வழி உள்ளது. திமுக தலை வர் கருணாநிதி கச்சத்தீவை மீட் போம் எனக் கூறுகிறார். ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ கச்சத்தீவைக் கொடுத்தது கொடுத்தபடியே இருக்கட்டும் என்பது போல் உள் ளனர்," என்று சீமான் கூறினார். கூட்டணியில் உள்ள கட்சிக ளுக்கு இடையே இப்படியொரு கருத்து வேறுபாடு நிலவும்போது கச்சத்தீவை எப்படி மீட்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், போலி வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!