கூட்டாட்சியே தமிழக மக்கள் நலன் காக்கும்: வாசன் திட்டவட்டம்

தர்மபுரி: கூட்டாட்சியே மக்கள் நலன் காக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக, அதிமுக போல மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிக்காத ஒரே அணி மக்கள் நலக் கூட்டணி தான் என்றார். “தற்போது ஏறுமுகத்தில் உள்ள மக்கள் நலக் கூட்டணி மே 19ஆம் தேதியன்று வெற்றிமுகம் காணப்போகிறது. வழக்குகள் இல்லாத, ஊழல் வழக்குகளில் சிறை செல்லாத தலைவர்களைக் கொண்ட கூட்டணி இது. “50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல் இது. தற்போதைய ஒரே தேவை ஆட்சி மாற்றம்தான். இனி திமுக, அதிமுகவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது சரியல்ல. மக்கள் நலக் கூட் டணி நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்,” என்றார் வாசன்.