‘துரோகி நானா ஜெயலலிதாவா - மக்களுக்குத் தெரியும்’

புதுவை: யார் துரோகி என்பது புதுவை மக்களுக்கு நன்கு தெரியும் என்று அம்மாநில முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலாப் பட்டு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மாநிலங்க ளவை உறுப்பினர் பதவியை அதிமுகவுக்கு வழங்கியதாகக் கூறினார். “விமான ஓடுதள விரிவாக் கத்துக்கு கடந்த ஐந்து ஆண்டு களாக தமிழகத்திடம் இருந்து நிலம் கேட்டு வருகிறோம். ஆனால் ஜெயலலிதா தர வில்லை. நிலம் கொடுத்தால் புதுச்சேரி வளர்ந்துவிடும் என்று அவர் நினைக்கிறார். ஜெய லலிதா துரோகியா, நான் துரோகியா?

“எனக்கு வாக்களித்தால் தற்கொலைக்குச் சமம் என்று ஜெயலலிதா என்ன அர்த்தத்தில் சொன்னார் எனத் தெரிய வில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்,” என்றார் முதல்வர் ரங்கசாமி. புதுவையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும் இப்போது ஆளும் பாஜகவும் அனுமதி தரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இரு கட்சிகளுமே புதுவைக்கு மாநில அந்தஸ்தை தரவில்லை என்று சாடினார். “அக்கட்சிகள் புதுவையின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வும் இல்லை. இவர்கள் எப்படி மாநிலத்தை நல்ல வளர்ச்சி திசை நோக்கி கொண்டு செல்வார்கள்?” என்று ரங்க சாமி கேள்வி எழுப்பினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு