பணம் விநியோகம்: அதிமுக, திமுக மீது பிருந்தா காரத் புகார்

மதுரை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் குற்றம்சாட்டி உள்ளார். நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்க புதுப்புது உத்திகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். “இரு கட்சிகளும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து இந்த தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். பெட்டிக் கடைகள், பால் வியாபாரிகள் மூலம் பணம் வழங்கக்கூடும். தேர்தல் ஆணையம் இதை தடுக்க வேண்டும்,” என்றார் பிருந்தா.

Loading...
Load next