‘சகாயத்தின் நேர்மையும் கொள்கையும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பிடிக்காது’

நாமக்கல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேர்மையாகச் செயல் படுவதும் அவரது கொள்கைகளும் திராவிட கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி களமிறங்குவது பிற கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார். “ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை ஏன் திமுக அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை தெரியுமா? அவர் லஞ்சம் தவிர் என்றார். இது திமுகவுக்குப் பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்து என்றார். இது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை.

“அவரது கொள்கைகள் பலவும் இரு கட்சியினருக்குமே பிடிக்காமல் போய்விட்டது. எனவேதான் அவருக்கு எதி ராகத் திரும்பியுள்ளனர்,” என் றார் சீமான். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கூட் டத்தைப் போன்றவை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தை மண்ணின் மக்களுக்காக ஆளக்கூடியவர்களே இப்போ தைய தேவை என்றார்.

“குண்டர்கள் ஆட்சி போல தமிழகத்தில் இப்போது ஆட்சி நடக்கிறது. இது மண்ணின் மக்களுக்கான ஆட்சியா என் றால் இல்லை. ஏனெனில் இங்கு மண்ணின் வளங்கள் களவு போகின்றன. கேரளாவில் ஆற்று மணல் அள்ள முடியாது. மணல் அள்ள அங்கு தடை உள்ளது. ஆந்திராவிலும் அதே நிலைதான். அதேபோல கர்நாட காவிலும் தடை இருக்கிறது. “ஆனால் தமிழகத்திலோ ஆற்று மணலை அள்ள வேண் டாம் என்று போராடினால் சிறை யில் போடுகிறார்கள். இதுதான் தமிழ் நாட்டின் நிலை,” என்றார் சீமான்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்