காங்கிரஸ் = திமுக உறவு குறித்து தமிழருவி மணியன் சாடல்

சென்னை: காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் இணைந்­தி­ருப்­பது இலங்கைத் தமி­ழர்­களுக்­குச் செய்­யும் துரோ­கம் என்று 2013ல் கூறினார் கரு­ணா­நிதி. இப்­போது 2016 தேர்­த­லுக்­காக காங்­கி­ர­சு­டன் கை கோர்த்து ஒரே மேடை­யில் பிர­சா­ரம் செய்­கின்றார் என்று சாடி­யுள்­ளார் காந்­திய மக்கள் இயக்கத்தின் தமி­ழ­ருவி மணி­யன் (படம்). "நேற்று வரை ஈழத் தமி­ழர்­களுக்கு அநீதி இழைத்த காங்­கி­ரஸ் இனி­யென்ன நல்லது செய்யப்போகிறது என்­பதை கரு­ணா­நிதி விளக்க வேண்­டும். "கிரானைட் முறை­கேடு விவ­கா­ரத்­தில் திமுக, அதி­முக ஆகிய இரு கட்­சி­களும் மாறி, மாறி குற்றம் சுமத்­து­கின்றன. இட­து­சா­ரி­கள் அவர்­களைக் குற்றம் சாட்­டு­கின்ற­னர். என் னைக் கேட்­டால் மூவ­ருக்­குமே குற்றம் சுமத்­து­வ­தற்­குத் தகுதி யில்லை. மதுரை கிரானைட் முறை­கேடு விவ­கா­ரம் குறித்­துப் பேசும் இட­து­சா­ரி­கள் கிருஷ்­ண­கிரி கிரானைட் கொள்ளை குறித்­துப் பேசத் தயாரா? அங்கு கிரானைட் முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­வரே வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும்­போது எப்படி பேச முடி­யும்?

"காந்­திய மக்கள் இயக்­கத்­தின் தேர்­தல் அறிக்கை பிற கட்­சி­களைப்­போல் மலி­வான வாக்­கு­று­தி­களு­டன் இல்­லா­மல் மாறு­பட்ட தேர்­தல் அறிக்கை­யாக வெளி­வந்­துள்­ளது. உதா­ர­ண­மாக அதில் கல்­விக் கடன், விவ­சா­யக் கடன் ரத்து இல்லை. ஆனால், தங்க­ளது கடன்களைத் திரும்­பிச் செலுத்­தும் வளர்ச்­சியை அவர்­கள் பெற தேவை­யான திட்­ட­மி­டல் உள்­ளது. "மாற்று அர­சி­ய­லுக்கு முதல் முயற்­சி­யாக தமி­ழ­கத்­தில் 46 இடங்களில் போட்­டி­யி­டு­கி­றோம். 2021 சட்டப் பேரவைத் தேர்­தலே எங்க­ளது இலக்கு. அதற்­குள் பெரும் மாற்று அர­சி­யல் சக்­தி­யாக வளர்ச்சி பெறு­வோம்," என்றார் தமி­ழ­ருவி மணி­யன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!