ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தேர்தலுக்குப் பிறகு தீர்ப்பு

புது­டெல்லி: வரு­மா­னத்­தை மிஞ்சிய அளவு சொத்­து வாங்கிக் குவித்த வழக்­கில் இருந்து ஜெய­ல­லிதா விடு­தலை செய்­யப்­பட்­டதை எதிர்த்­துத் தொட­ரப்­பட்ட மேல்­முறை­யீட்டு மனு மீது தமி­ழக சட்­ட­மன்றத் தேர்­த­லுக்கு முன் தீர்ப்பு வெளி­யாக வாய்ப்­பில்லை. இந்த மேல்­முறை­யீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் மே 14ஆம் தேதிக்­குள் முடிக்­கப்­பட்டு ஜூலை மாதம்­தான் தீர்ப்பு வழங்கப்­படும் எனத் தெரி­கிறது. சொத்­துக் குவிப்பு வழக்­கில் ஜெய­ல­லி­தா­வுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ100 கோடி அப­ரா­தம் விதித்­தார் பெங்க­ளூரு தனி­நீ­தி­மன்ற நீதி­பதி குன்ஹா. ஆனால் மேல்­முறை­யீட்டு மனுவை விசா­ரித்த கர்­நா­டகா உயர்­ நீ­தி­மன்ற தனி ­நீ­தி­பதி குமா­ர­சாமி ஜெய­ல­லிதா உள்­ளிட்ட நால்­வரை விடு­தலை செய்து தீர்ப்­ப­ளித்­தார். இதனை எதிர்த்­து கர்­நா­டகா அரசு உச்­ச ­நீ­தி­மன்றத்­தில் மேல்­முறை­யீடு செய்­தது. இந்த மேல்­முறை­யீட்டு மனு 20 நாட்­க­ளாக விசா­ரிக்­கப்­பட்­டது. கோடை­கால விடு­முறைக்­குப் பின்னர் ஜூன் 29ஆம் தேதி உச்­ச ­நீ­தி­மன்றம் மீண்­டும் இயங்கத் தொடங்­கும். ஆகை­யால் ஜூலை முதல் வாரத்­தில் இந்த வழக்­கில் தீர்ப்பு வெளி­யா­கக் கூடும் எனத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!