‘இலவச’ நோய் விடாமல் துரத்தும் கட்சிகள்!

சென்னை: இல­வ­சங்கள் மக்களை அடிமைப்­படுத்­து­கின்றன என்ற குரல் ஓங்கி ஒலித்­துக்கொண்­டி­ருக்­கும் இந்த நிலை­யி­லும் அதைப் பற்றி சற்­றும் கவலைப்­ப­டா­மல் கட்­சி­கள் குறிப்­பாக திரா­வி­டக் கட்­சி­கள் இல­வ­சங்களை அறி­வித்து மக்­களின் உணர்­வு­களை மதிக்­காத வகை­யில் நடந்து கொண்­டி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மா­க­வும் அதிர்ச்­சி­யா­க­வும் உள்­ளது. அதி­முக மட்­டு­மல்­லா­மல் திமு­க­வும் கூடத் தனது தேர்­தல் அறிக்கை­யில் இல­வச அறி­விப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது. அதே­போல பாம­க­வும் இல­வ­சங்களை அறி­வித்­துள்­ளது. பாஜ­க­வும் தான் ஆட்­சிக்கு வந்தால் ஏழைப் பெண்­களுக்கு எட்­டுக் கிராம் தங்கம் தரு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­துள்­ளது. இதில் இல­வச அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வ­தில் மற்­ற­வர்­களை அதி­முக மிஞ்சிவிட்டது. சாத்­தி­யமே இல்­லாத பல திட்­டங்களை­யும் அக்­கட்சி அள்ளி விட்­டுள்­ளது. இல­வச கைத்தொலைபேசி, பெண்­கள் மோட்டார் சைக்கிள் வங்க 50 விழுக்­காடு மானி­யம், ரேஷன் கார்­டு­களுக்கு ரூ. 500 இல­வச கூப்பன், பள்ளி மாண­வர்­களுக்கு இல­வச மடிக்கணினி, விவ­சா­யக் கடன் தள்­ளு­படி, 100 யூனிட் வரை மின்கட்­ட­ணம் ரத்து, இல­வச செட்­டப் பாக்ஸ், இல­வச ஆடு மாடு திட்டம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

திமுக அளித்­துள்ள இல­வச அறி­விப்­பு­கள் - ஏழை­களுக்கு நவீன கைத்­தொலை­பேசி, மாண­வர்­களுக்கு இல­வ­ச­மாக 3ஜி4ஜி இணை­ய­த் தள இணைப்பு, இல­வச மடிக்­க­ணினி, கைய­டக்­கக் கணினி, மாதத்­திற்கு 10 ஜிபி இல­வச டவுன்­லோட் வசதி. மாதந்­தோ­றும் ரேஷன் கடை­களில் 20 கிலோ இல­வச அரிசி, பயிர்க்­ க­டன், கல்­விக் கடன் ரத்து, ஆவின் பால் விலையை லிட்­ட­ருக்கு ரூ. 7 குறைப்­பது என்று பட்­டி­யல் நீண்­டு­கொண்டே செல்­கிறது. பாஜ­க­வும் பல இல­வ­சத் திட்­டங்களை அறி­வித்­துள்­ளது. அதில் கவர்ச்­சி­க­ர­மா­னது வறு மைக் கோட்­டுக்­குக் கீழ் உள்ள பெண்­களுக்கு எட்­டுக் கிராம் இல­வ­சத் தங்கம். பாம­க­வும் பல இல­வ­சங்களை அறி­வித்­துள்­ளது. அதில் சென்னை­யில் இல­வச பேருந்துப் பய­ணம் என்­பது முக்­கி­ய­மா­னது. இன்­னும் எத்தனை காலம்­தான் இல­வ­சங்களை வாங்கி மக்கள் ஏமா­று­வார்­களோ என்­கின்றன தமி­ழ­கத்­தி­லுள்ள விழிப்­பு­ணர்வு இயக்­கங்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு