வெப்பம் தணித்த திடீர் மழை

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கி சென்னையில் கடந்த வாரம் வரை வாட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் தற்போது சற்றே குறைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந் தது. வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அது கூறியி ருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கருமேகங்கள் சூழ்ந்தன.

தொடர்ந்து, சென்னையின் புறநகரான படப்பை, கும்மிடிப் பூண்டி, பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழை யால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல திருவண்ணாமலை மாவட்டம், கரூர் மாவட்டம், தேனி மாவட்டம் ஆகியவற்றின் பகுதிக ளில் கனமழை பெய்ததால் வெப்பத் தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. அமராவதி ஆறு நீரற்று வறண்டு கிடந்த நிலையில் திடீ ரென்று பெய்த மழையால் விவ சாயிகள் மகிழ்ந்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்