பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி கொலை

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி பூம்பொழில் நகரைச் சேர்ந் தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடியான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓட்டேரியில் குடியிருந்தபோது ஒருவரைக் கொலை செய்ததாகக் கூறப்படு கிறது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஓட்டேரி சன்னி யாசி தெருவிலுள்ள தமது நண்பரைச் சந்திக்க கார்த்திக் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரைச் சுற்றி வளைத்தனர்.

தப்பி ஓடிய கார்த்திக்கை அவர்கள் விரட்டிச் சென்றனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப் பின் 4வது மாடிக்குச் சென்ற கார்த்திக்கை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். தலை மற்றும் கழுத்து உள் ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மர்மக் கும்பல் அங் கிருந்து தப்பிச் சென்றது. அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்போர் இது குறித்து உடனடியாக போலிசாருக்கு தகவல் கொடுத் தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அயனாவரம் போலிசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கார்த் திக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்தார். இதுபற்றி போலிசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். பழிக்குப்பழி வாங்க கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!