வலுவிழக்கும் பாம்பன் பாலம்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் சாலை பாலத்தில் கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல் லும்போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள சுருள் கம்பித் தகடுகள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டன. ஆனால் மராமத்துப் பணிகள் முடிந்து சில மாதங்களிலேயே அத் தகடுகளின் பொருத்திகள் கழன்று விழுந்தன. இதனால் பாலத்தில் அதிர்வு அதிகரித்து சிமெண்ட் தூண் பகுதிகள் சேதமடையும் நிலை உருவானது. இது தொடர்ந் தால், பாலத்தின் மையப் பகுதியில் கப்பல் செல்வதற்காக அமைக்கப் பட்டுள்ள பகுதிகளும் வலுவிழந்து உடைந்துபோகும் அபாயம் நிலவி யது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள் பிரச்சினைக்குரிய சுருள் கம்பித் தகடுகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!