66 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஒரு கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கத் திட்டம்

சென்னை: பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித மாக வரும் 10ஆம் தேதி ஒரு கோடிப் பேர் உறுதிமொழி ஏற்க உள்ளனர். வாக்களிக்க பணம் வாங்கு வதோ, கொடுப்பதோ கூடாது என் றும், இது சட்டப்படி தவறு என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் உறுதி மொழி ஏற்க உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 66 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் இந்த உறுதிமொழியை எடுக்க இருப்பதாகக் கூறினார்.

"தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தலைமைத் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப் பித்துள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என அனைவரும், 'வாக்களிக்க பணம் வாங்க மாட் டோம், பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிப்போம், வாக்களிக்க பணம் கொடுக்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்," என்றார் ராஜேஷ் லக்கானி.

வாக்குப்பதிவு மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார். "ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 50 பேரையாவது கூட்டி உறுதிமொழி எடுக்க வைக் கப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரத்தின்போதும் உறுதிமொழி எடுக்கலாம். இதன் மூலம் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படும்" என்று ராஜேஷ் லக்கானி மேலும் தெரி வித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!