சசிகலா உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திருவாரூர்: முதல்வர் ஜெயலலிதா வின் தோழி சசிகலாவின் உறவி னர் வீட்டில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை காரணமாக முத்துப்பேட்டையில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமு கர் ஒருவரது பெட்ரோல் நிலையத் துக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தாய்மாமனான தங்க வேலுவின் மகன் டிஏடி.அன்பழகன். இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ள பால கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டில் லட்சக்கணக்கான ரொக்கப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றபோது, அன்பழகன் வீட்டில் இல்லை. எனினும் வீட்டைத் திறந்த அதிகாரிகள் ஏறத்தாழ 2 மணி நேரம் சோதனை நடத்தினர். இச்சமயம் பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட தாகக் கூறப்பட்டாலும், அதிகார பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

மன்னார்குடியில் ஜெயலலிதா பேரவை திருவாரூர் மாவட்டச் செயலாளர் பொன் வாசுகிராம் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், சசிகலாவின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஒரத்தநாடு தொகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான பெட் ரோல் நிலையத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையி லான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த 602 டோக்கன்களை பறிமுதல் செய்த துடன், பெட்ரோல் நிலையத்துக்கு சீல் வைத்தனர். அதிமுக பிரமுகர்களைக் குறி வைத்து இத்தகைய நடவடிக்கை கள் எடுக்கப்படுவதாக அக்கட்சி யினர் புகார் எழுப்பியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!