நகை, கைத்தொலைபேசிகள் திருடியவர் கைது

சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் கடந்தாண்டு தம்பதியிடம் நகை, கைத்தொலைபேசிகள் திருடியவரை சில தினங்களுக்கு முன்பு போலிசார் கைது செய்தனர். ஆவடியைச் சேர்ந்த கனகராஜ்- கௌதமி தம்பதியினரின் கைப்பை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவடி ரயில் நிலையத்தில் திருட்டுப் போனது. அதில் ஆறரை பவுன் நகை, விலையுயர்ந்த 2 கைத்தொலைபேசிகள், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவை இருந்தன. இது தொடர்பாக குற்றவாளிகளைத் தேடி வந்த காவல்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருமுல்லைவாயலைச் சேர்ந்த விக்டர் என்ற பிரான்சிஸ் என்பதும் கடந்தாண்டு கனகராஜ்–கௌதமி தம்பதியிடம் கைப்பையைத் திருடியதும் தெரிந்தது.

Loading...
Load next