அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணைத் தாக்கி நகை கொள்ளை

செங்கல்பட்டு: தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி, மிரட்டி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரி காட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் வசிக்கும் மீனாட்சியின் மகன் வேலைக்குச் சென்றிருந்தபோது
3 வாலிபர்கள் கதவைத் தட்டித் தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுப்பதற்காக மீனாட்சி கதவைத் திறந்து வைத்து வீட்டுக்குள் சென்றார்.
திடீரென 3 வாலிபர்களும் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி நகை, பணம் கேட்டனர். ஆனால், மீனாட்சி கொடுக்க மறுத்ததால் அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
பின்னர் கொள்ளைக் கும்பல் மீனாட்சி அணிந்து இருந்த இரண்டரை பவுன் நகை, பீரோவில் இருந்து ஆறரை பவுன் நகையை எடுத்துத் தப்பிச் சென்றுவிட்டனர்.