மதுபோதையில் மருத்துவ அவசர வாகனத்தை மறித்தவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது. தனியார் மருத்துவ அவசர வாகனம் ஓட்டுநரான இவர் கெட்டிசெவியூரில் இருந்து கருதம்பாடிபுதூர் சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது எதிர் திசையில் தாறுமாறாக மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாச்சிமுத்து என்பவர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தார். மேலும் ஷாகுல் அமீதுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். தகவலறிந்து வந்த போலிசார் நாச்சிமுத்துவைக் கைது செய்தனர்.