மன நோயாளிக்கு நச்சு ஊசி போட்டுக் கொலை

சென்னை: சென்னை அருகே கடந்த 2015ஆம் ஆண்டு 3 பேர் நச்சு ஊசி போட்டுக் கொலை செய்­யப்­பட்ட வழக்­கின் விசா­ரணை­யில், சோதனைக்­காக மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு ஊசி போட்டுக் கொலை செய்­யப்­பட்­ட­அதிர்ச்சித் தகவல் வெளி­யா­கி உள்­ளது. நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்­கத்தைச் சேர்ந்த­வர் ஸ்டீபன் (41). சொத்துச் சந்தை வர்த்­த­க­ரான இவர் தன் நண்ப ருடன் சேர்ந்து தனது மைத்­து­னர் ஜான் பிலோ­மி­னன், தான் தவறான உறவு வைத்­தி­ருந்த பெண்­களின் கண­வர்­கள் ஸ்ரீதர், ஹென்றி ஆகிய 3 பேரையும் நச்சு ஊசி போட்டுக் கொலை செய்தார்.

குடையின் நுனியில் நச்சு ஊசியைப் போட்­ட­தா­லும் இந்த நச்சு உடலில் நெஞ்சு வலிக்­கு­ரிய அறி­கு­றியை ஏற்­படுத்­தி­ய­தா­லும் மூவரும் நெஞ்சு வலியால் இறந்த­தாக அப்போது கூறப்­பட்­டது. இதற்­கிடையே, அண்மை­யில் ஸ்டீபன் வீட்டில் நடந்த ஒரு திருட்டு தொடர்­பாக காவல்­துறை­யி­னர் விசாரணை செய்­த­தில் இந்தக் கொலை குறித்த விவ­ரங்கள் வெளி­வந்தன. இதை­ ய­டுத்­து போலிசார், ஸ்டீபன், சதீஷ்­கு­மார், பாலாஜி, முரு­கா­னந்தம் ஆகிய 4 பேரைக் கைது செய்­த­னர். அவர்­களி­டம் நடத்­தப்­பட்ட விசா­ரணை­யில், போலி­சி­டம் சிக்­கா­மல் நூத­ன­மான முறையில் கொலை செய்வது எப்படி என்பதை இணை­யத்­த­ளம் மூலம் தெரிந்து கொண்ட ஸ்டீபன் அதற்­கான நச்சை மும்பை­யில் இருந்து வாங்கியுள்ளார். பின்னர், குடையின் நுனியில் ஊசியை வைத்து செலுத்­தும்­போது அது சரியாக செயல்­படு ­கிறதா என்பதை முதலில் தெரு நாய்­களின் மீது சோதனை செய்­துள்­ளார் ஸ்டீபன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்