முத்தரசன்: ஜெயாவைக் காப்பாற்றுகிறார் பிரதமர் மோடி

மதுரை: தேர்தல் களத்தில் முதல்வர் ஜெயலலிதாவைக் காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தேர் தல் கருத்துக் கணிப்பு களைப் பொய்யாக்கி, மக் கள் நலக் கூட்டணி வெற்றி பெறும் என்றார். “கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டிலிருந்து அதிகாரிகள் ரூ.50 கோடி கைப்பற்றியதாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.4 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் பூகம்பம் கிளம்பும்.

“இதைத் தோண்டத் தோண்ட சங்கிலி தொடர் போல் பல முறைகேடுகள் வெளிவரும். இவ்விஷயத் தில் ஜெயலலிதாவைக் காப் பாற்றும் வேலையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்,” என்றார் முத்தரசன். புதிய வாக்காளர்கள், உட்பட பல்வேறு தரப்பின ரும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்பதாக அவர் மேலும் கூறினார்.