விஜயகாந்த்: பேருந்து, பால், மின்கட்டண உயர்வே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம்

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கான காரணத்தை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் விவரித்துள்ளார். பேருந்து கட்டணம், மின் கட்ட ணம், பால் விலை ஆகியவற்றை அதிமுக அரசு உயர்த்தியதில் தமக்கு சிறிதும் உடன்பாடில்லை என்றும் அதன் காரணமாகவே அதிமுக கூட்டணியைக் கைவிட் டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பண்ருட்டியில் தேர்தல் பிரசா ரம் மேற்கொண்ட அவர், திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தார். "இந்தத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான போர். கடலூர் மாவட்டத்தை முன்பு 'தானே' புயல் தாக்கி கடும் சேதம் ஏற்படுத்திய போதும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப் பட்ட போதும் இந்தப் பக்கமே வராத ஜெயலலிதா இப்போது மட்டும் ஏன் வருகிறார்?

"வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மின்சாரத்தை இலவசமாக அளிக்காதவர் இப் போது மட்டும் இலவசமாக அளிப் பதாகக் கூறுகிறார். மின்சாரமே இல்லாமல் இலவசமாக எப்படி அளிப்பார்?" என்று கேள்வி எழுப்பினார் விஜயகாந்த். தற்போது அனைவரும் கை பேசி வைத்திருப்பதாகக் குறிப் பிட்ட அவர், இந்நிலையில் கைபேசி இலவசமாக அளிக்கப் படும் என்று ஜெயலலிதா அறிவித் துள்ளது பயன் அளிக்காது என்றார். "ஜெயலலிதாவுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் இலவசங்களை அறிவித்து வருகி றார்," என்று பிரசார உரையில் மேலும் குறிப்பிட்டார் விஜயகாந்த்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!