அதிமுகவின் ஏமாற்று வேலை: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: படிப்படியாக மதுவிலக்கு என அதிமுக கூறுவது ஏமாற்று வேலை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் சாராய ஆலைகளை நடத்தி வருவதாக சென்னையில் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் சுட்டிக் காட்டினார். "ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என நாங்கள் அறிவித்த பின்னர்தான், திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் அதை அறிவித்துள்ளனர்.

இதுவரையில் ஆட்சி புரிந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் நல்லது ஏதும் நடக்கவில்லை. மாறாக ஊழலும் மதுவும் லஞ்சமும்தான் அதிகரித்துள்ளன. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அதிகமாக பேசுவார்கள். ஆனால், எதையும் செயல்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் கட்சித் தலைமையான டெல்லியில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்," என்றார் திருமாவளவன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!