தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஏமாற்றும் கட்சிகள்: மாயாவதி கோபம்

சென்னை: தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம்சாட்டினார். சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், இலவசப் பொருட்களால் எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும் என்றார். "மாநிலக் கட்சிகள் இலவச கைபேசி உட்பட பல இலவசங்களை அறிவித்துள்ளன. தமிழக மக்களின் பிரச்சினைகளை இந்தக் கட்சிகள் தீர்க்காது, தீர்க்கவும் முயற்சி மேற்கொள்ளாது. மக்களுக்குத் தேவை நல்ல கல்வி, வேலைவாய்ப்புதான். வறுமையும் ஒழியவேண்டும். இதற்கு இந்த இலவசப் பொருட்கள் உதவாது," என்றார் மாயாவதி. இலவசங்கள் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று குறிப்பிட்ட அவர், இம்மாய வலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!