கொள்ளையடிப்பதில் கூட்டணி: விஜயகாந்த் குற்றச்சாட்டு

கட்சிகளும் கொள்ளையடிப்பதில் கூட்டாளிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், கருத்துக் கணிப்பு வெளியிடுவதில் திமுகவும் அதிமுகவும் ஊடகங்களுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். “2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் எனப் பல்வேறு ஊழல்களில் காங்கிரசும் திமுகவும் ஈடுபட்டன. அதேபோல அதிமுகவினர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல் வேறு வழக்குகள் உள்ளன. எனவே, திமுக, அதிமுக இரண்டுமே விஷச் செடிகள்.

“கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து கொள்ளை அடித்திருக்கின்றனர். இந்தக் கட்சிக ளால் எந்தவொரு வளர்ச்சியோ அல் லது மேம்பாடோ ஏற்படவில்லை,” என்றார் விஜயகாந்த். திராவிடக் கட்சிகள் தேமுதிக தேர்தல் அறிக்கையை காப்பியடித்துள் ளதாகக் குறிப்பிட்ட அவர், பல ஆண்டுகளாக அக்கட்சிகள் இதைத் தான் செய்கின்றன என்றார். “தமிழகத்தில் 50 ஆண்டுகளாக அதே சாலைகள்தான் இருக்கின்றன. எந்த மாற்றமும் இல்லை. வாக்களித்து வாக்களித்து மக்கள் சோர்ந்து போய்விட்டனர். “மதுவிலக்கே முடியாது என்று கூறிய அதிமுக, இப்போது தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது. இதை மக்கள் நம்ப மாட்டார்கள். வேண்டிய ஊடகங் கள் மூலம் இரு கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின் றன,” என்று விஜயகாந்த் சாடினார்.

Loading...
Load next