தேர்தலுக்குப் பின் கூட்டாட்சி: விஜயகாந்த் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை அருகே நெற்குன்றத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழலுக்கு உத்தரவாதம் தரும் ஒரே கட்சி திமுகதான் என்றார். “தமிழகத்தில் அறிஞர் அண்ணா காலத்துக்குப் பிறகு, இப்போதைய தேர்த லில் திருப்புமுனை ஏற்படும். அந்தத் திருப்புமுனை கூட்டாட்சியாக இருக்கும். 93 வயதிலும் திமுக தலைவர் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதை நம்பாதீர்கள்.

“தமிழகத்தில் ஊழ லுக்கு உத்தரவாதம் திமுக தான். அவர்கள் செய்த 2ஜி ஊழலுக்குத் தனி நீதிமன் றமே வைத்து விசாரிக்கி றார்கள். நிலக்கரி உள் ளிட்ட அத்தனையிலும் ஊழல் செய்தவர்கள் காங்கி ரஸ்காரர்கள். அவர்களின் ஊழலை அடுக்கிக் கொண்டே போகலாம்,” என்று விஜயகாந்த் குற்றம்சாட்டினார். தமிழக மக்களின் நலன் கருதி 6 தலைவர்கள் ஒன்றாக இணைந்திருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், ஆறு முகங்களாக இருந்தாலும், இனி தேமுதிக அணிக்கு ஏறுமுகம்தான் என்றார். “கடந்த 50 ஆண்டுக ளாக தமிழகத்தின் சொத் துகளைத் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கொள்ளையடித்தன,” என்று விஜயகாந்த் சாடினார்.