மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஜெயா அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்குத் தகுந்த ஒத்துழைப்பு தரவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் வீதிப்பிரசாரம் மேற்கொண்ட அவர், அத்தொகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பையுடன் அசுத்தமாகக் காட்சியளிப்பதாகக் கூறினார். “அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்துவிட்டன. தமிழகத்தின் திட்டங்கள் குறித்துப் பேசுவதற்குக்கூட முதல்வரைச் சந்திக்க முடியவில்லை,” என்றார் பியூஷ் கோயல்.