நாம் தமிழர் கட்சிக்குப் பெருகும் ஆதரவு

திமுக, அதி­மு­க­வுக்கு அடுத்­த ­ப­டி­யாக பாமக, நாம் தமி­ழர் கட்­சி­களுக்கு மக்­களிடையே ஆத­ரவு பெருகி வருவதை உணர்த்­தும் வகை­யில் இப்­போது ஒரு புதிய கருத்­துக்­க­ணிப்பை வெளி­யிட்­டுள்­ளது புதிய தலை­முறை தொலைக்­காட்சி. தனித்தனி­யாக கட்­சி­களைப் பிரித்­துப் பார்த்­தால் இவர்­களுக்கு அடுத்த இடத்­தில்­தான் தேமு­திக, மதி­முக உட்­ளிட்ட பிற கட்­சி­கள் வரு­கின்றன. வரும் சட்­ட­மன்றத் தேர்­த­லில் ‘உங்கள் வாக்கு யாருக்கு?’ என்­பது உட்பட பல்­வேறு கேள்­வி­களைக் கேட்­டுக் கருத்­துக்கணிப்பை நடத்தி நேற்று முடிவை வெளி­யிட்­டது புதிய தலை­முறை. இதில் வந்­துள்ள முடி­வு­கள் சில எதிர்­பார்க்கப்பட்டவை­தான். சில எதிர்­பா­ரா­தவை. எதிர்­பா­ரா­தது வரிசை­யில் முக்­கி­ய­மா­னது நாம் தமி­ழர் கட்­சிக்­குக் கிடைத்­துள்ள ஆத­ரவு. இந்தக் கட்­சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்று பல­ரும் எண்­ணிக்­கொண்­டி­ருந்த நிலை­யில் நாம் தமி­ழர் கட்­சி­யும் தலை தூக்­கி­யுள்­ள­தாக இந்தக் கருத்­துக்கணிப்­புக் காட்­டு­கிறது.

உண்மை­யில் நியூஸ் 7 = தின­ம­லர் கருத்­துக் கணிப்பு ஒளி­ப­ரப்­பா­ன­போது அதில் பேசி­ய­வர்­கள் மற்றவை என்­ப­தில் ‘நாம் தமி­ழர் கட்சி’ முக்­கி­ய­மாக உள்­ள­தாகத் தெரி­வித்­த­னர். ஆனால் வெளிப்படையாக அக்­கட்­சி­யின் நிலையைத் தெரி­விக்­க­வில்லை. ஆனால் புதிய தலை­முறை வெட்ட வெளிச்­ச­மாக்­கி­யுள்­ளது. திமுக, அதி­மு­க­வுக்கு அடுத்­த ­ப­டி­யாக பாமக, நாம் தமி­ழர் கட்­சி­களுக்கு மக்­களிடையே ஆத­ரவு பெருகி வருவதை உணர்த்­தும் வகை­யில் இப்­போது ஒரு புதிய கருத்­துக்­க­ணிப்பை வெளி­யிட்­டுள்­ளது புதிய தலை­முறை தொலைக்­காட்சி. தனித்தனி­யாக கட்­சி­களைப் பிரித்­துப் பார்த்­தால் இவர்­களுக்கு அடுத்த இடத்­தில்­தான் தேமு­திக, மதி­முக உட்­ளிட்ட பிற கட்­சி­கள் வரு­கின்றன. வரும் சட்­ட­மன்றத் தேர்­த­லில் ‘உங்கள் வாக்கு யாருக்கு?’ என்­பது உட்பட பல்­வேறு கேள்­வி­களைக் கேட்­டுக் கருத்­துக்கணிப்பை நடத்தி நேற்று முடிவை வெளி­யிட்­டது புதிய தலை­முறை. இதில் வந்­துள்ள முடி­வு­கள் சில எதிர்­பார்க்கப்பட்டவை­தான். சில எதிர்­பா­ரா­தவை. எதிர்­பா­ரா­தது வரிசை­யில் முக்­கி­ய­மா­னது நாம் தமி­ழர் கட்­சிக்­குக் கிடைத்­துள்ள ஆத­ரவு.

இந்தக் கட்­சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்று பல­ரும் எண்­ணிக்­கொண்­டி­ருந்த நிலை­யில் நாம் தமி­ழர் கட்­சி­யும் தலை தூக்­கி­யுள்­ள­தாக இந்தக் கருத்­துக்கணிப்­புக் காட்­டு­கிறது. உண்மை­யில் நியூஸ் 7 - தின­ம­லர் கருத்­துக் கணிப்பு ஒளி­ப­ரப்­பா­ன­போது அதில் பேசி­ய­வர்­கள் மற்றவை என்­ப­தில் ‘நாம் தமி­ழர் கட்சி’ முக்­கி­ய­மாக உள்­ள­தாகத் தெரி­வித்­த­னர். ஆனால் வெளிப்படையாக அக்­கட்­சி­யின் நிலையைத் தெரி­விக்­க­வில்லை. ஆனால் புதிய தலை­முறை வெட்ட வெளிச்­ச­மாக்­கி­யுள்­ளது. உங்கள் வாக்கு யாருக்கு என்று ஒரு கேள்வி. இதில் அதி­முக முத­லி­டத்தை­யும், திமுக 2வது இடத்தை­யும் பிடித்­துள்­ளன.

38.58% வாக்குகளுடன் 164 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியைத் தொடரப் போகிறது என்றும் 32.11% வாக்கு களுடன் திமுக 66 இடங் களையே பெறும் எனவும் கூறு கிறது இக் கருத்துக்கணிப்பு. என்டிடிவி கருத்துக் கணிப் பில் 143 இடங்களில் திமுக கூட்டணி வென்று ஆட்சியமைக்கும் என்றும் அதிமுக 70 இடங்களில் வெல்லும் எனவும் கூறுகிறது. அதிமுக வாக்கு வங்கியில் இருந்து சுமார் 7% திமுக கூட்டணிக்குச் செல்லும் என்கிறது.

புதிய தலை­முறை தொலைக்­காட்சியின் கருத்துக்கணிப்பில் மக்கள் நலக் கூட்டணி அதா­வது தேமு­திக அணி 3வது இடத்­திலும் பாம­க நான்கா­வது இடத்திலும் உள்ளன. இது எதிர்­பார்த்­த­து­தான். ஆனால் ‘நாம் தமி­ழர் கட்சி’ 5வது இடத்தைப் பிடித்­துள்­ளது. அதைவிட முக்­கி­ய­மாக பாஜ­கவை பின்­னுக்­குத் தள்­ளி­யுள்­ளது. பாஜ­க­வுக்கு 6வது இடம்­. இதில் கட்­சி­கள் அடிப்­படை­யில் பிரித்­துப் பார்த்­தால் திமுக, அதிமுக நீங்கலாக ‘நாம் தமி­ழர் கட்சி’ மக்களின் மனதில் நான்காவது இடத்தில் உள்ளது என்பதை அறிய முடி­கிறது. அதற்கு அடுத்த இடத்­தில் இருப்­பது மக்கள் நலக் கூட்டணி. இக்­கூட்­ட­ணிக்­குக் கிடைத்­துள்ள ஆத­ரவு 8.55%. பாம­க­வின் ஆத­ரவு 4.47%. நாம் தமி­ழ­ருக்­குக் கிடைத்­துள்ள ஆத­ரவு 2.12%.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். படம்: ஊடகம்

23 Aug 2019

26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் சிதம்பரம்

ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்தபடியே  ஆற்றைக் கடந்து சென்ற அவலம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  படம்: ஊடகம்

23 Aug 2019

கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்துசென்ற கிராமமக்கள்

மகளைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி.

23 Aug 2019

காங்கிரஸ்: மகளைக் கொன்றவரை நம்பும் சிபிஐ, சிதம்பரத்தை நம்பவில்லை