இங்கிலாந்து: மல்லையாவை திருப்பி அனுப்ப இயலாது

புது­டெல்லி: இங்­கி­லாந்தின் வெளியு­ற­வுத்­துறை வெளி­யிட்­ட அறிக்கையில், “தொழிலதிபர் விஜய் மல்லை­யாவை இந்­தி­யா ­வி­டம் ஒப்­படைக்க மாட்டோம்,” என்று அறி­வித்துள்ளது. மேலும் அந்த அறிக்கை­யில், “1971ஆம் ஆண்டு சட்­டப்­படி இங்­கி­லாந்­தில் இருக்­கும் தனி ­ந­பர் ஒருவர் செல்­லத்­தக்க பாஸ் ­போர்ட் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே சம­யத்­தில் மல்லையா மீதான குற்­றச்­சாட்­டின் தீவிரத்­தின் அடிப்­படை­யில் இந்­தி­யா­வுக்கு உதவ இங்­கி­லாந்து அரசு தயாராக இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­து உள்­ளது.

இந்தியா பரஸ்­ப­ரம் சட்ட உதவி மூல­மா­கவோ அல்லது பிடித்து ஒப்­படைக்­கும்படி கேட்டுக் கொண்டாலோ அது பற்றி பரி­சீ­லனை செய்­யப்­படும் என்று இங்­கி­லாந்து அறி­வித்­துள்­ளது. இங்­கி­லாந்­தின் இந்த அறி­விப்பு சற்று பின்­னடை­வாகக் கரு­தப்­பட்­டா­லும் விஜய் மல்லை­யாவை இந்­தி­யா­வுக்கு அழைத்து வந்­து­விட முடியும் என்று கூறப்­ படு­கிறது. இந்தியா–இங்­கி­லாந்து நாடு­களிடையே பரஸ்­பர சட்ட உதவி ஒப்­பந்தம் 1992ஆம் ஆண்டு செய்­யப்­பட்­டுள்­ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்