வட இந்தியாவில் பெருகி வரும் துப்பாக்கி கலாசாரம்

பாட்னா: இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த முப்பது வருடங்களாக குற்றச் செயல்கள் அதிகம் நடைபெற்று வரும் வேளையில் அங்கே துப்பாக்கி கலாசாரமும் வேகமாக வளர்ந்துள்ளது. தொடக்கத்தில் வேட்டைக்காக துப்பாக்கி வாங்கியவர்கள் பிறகு தங்களின் பாதுகாப்புக்காக வாங்கத் தொடங்கினர். தற்போது துப்பாக்கி வைத்திருப்பது கவுரவச் சின்னமாக மாறிவிட்ட நிலையில், சிறிய வாய்த் தகராறுகளிலும் அது வெடிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசின் உரிமம் பெற்றவை மட்டுமின்றி கள்ளத் துப்பாக்கிகளும் அங்கு புழக்கத்தில் உள்ளன. பீகாரில் கள்ளத் துப்பாக்கிகள் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு காரணம்.