கர்நாடகாவில்பறவைக்காய்ச்சல்: 1.5 லட்சம் கோழிகள் அழிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தின் ஹம்னாபாத் கிராமத்தில் பறவை காய்ச்சல் காரணமாக 35,000 கோழிகள் இறந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. ரமேஷ் குப்தா என்பவரது கோழிப்பண்ணையில் 20 நாட்களில் 35,000 கோழிகள் இறந்த‌தால் அவர் கால்நடைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் ரமேஷ் குப்தாவின் கோழிப் பண்ணைக்கு சென்று ஆய்வு செய்து, மாதிரிகளைச் சேகரித்தனர். போபாலில் உள்ள கால்நடை ஆய்வு மைய‌த்தில் ஆய்வு செய்ததில் கோழிகள் இறந்ததற்கு பறவை காய்ச்சல் ஹெச்5என்1 வைரஸ் தாக்கியதுதான் காரணம் என தெரியவந்தது.