அவசர போலிசை அழைத்த நீதிபதி ஏமாற்றம்

புது­­­­­­­டெல்லி: டெல்லி உயர்­­­நீ­­­தி­­­மன்ற நீதிபதி விபின் சங்கி (படம்) அவசர உதவிக்­­­கான எண் 100ஐ அழைத்து மறு­­­பு­­­றம் எந்த பதிலும் கிடைக்­­­கா­­­மல் போனதை அடுத்து அவர் டெல்லி போலிஸ் ஆணைய ருக்குக் கடிதம் எழு­­­தி­­­யுள்­­­ளார். உயர் நீதி­­­மன்ற நீதிபதி ஜி ரோஹி­­­னி­­­யும் அந்தக் கடி­­­தத்­­­தில் அவசர எண் 100ஐ அழைத்­­­தால் ஒரு பதிலும் கிடைப்­­­ப­­­தில்லை, அல்லது காக்க வைக்­­­கிறார்­­­கள் எனும் அதே கருத்தைத் தனது அனு­­­ப­­­வத்­­­தின் வாயி­­­லா­­­கக் கூறி இருந்தார். ஒரு திருமண வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ப­தற்­காக நீதிபதி விபின் சங்கி, வசந்த் குஞ்ச் பகுதியை நோக்கிச் செல்லும்போது மிகக் கடுமை­யான வாகன நெரி­ச­லில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது.

“வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலிசார் யாரும் அங்கே இல்லை. “ஆகவே, இரவு 10.12 மணிக்கு போலிசா ருக்கு தகவல் கொடுக்க எண்ணி அவசர எண் 100ஐ அழைத்தேன். “எனினும், யாரும் மறுபுறம் எடுக்கவில்லை. ஐந்து நிமிடங் கள் காத்திருந்தும் ஒரு பலனு மில்லை. 100 அவசர எண் என்று பெயர். ஆனால், ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகும் மறுபுறம் தொலைபேசியை எடுக்கவோ பதிலளிக்கவோ யாருமில்லை,” என்று போலிசுக்கு எழுதிய அந்தப் புகார் கடிதத்தில் விபின் சங்கி எழுதியிருந்தார். அவர் 100ஐ அழைத்து பதில் கிடைக்­கா­த­தால் அது குறித்து போலிஸ் உயர் அதிகாரி அலோக் குமா­­­ருக்கு நீதிபதி எழுதிய கடி­­­தத்­­­தில் ‘மிக மோசமான அனு­­­ப­ வம்’ என்று கூறி இருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது