அமைச்சர் மீது காலணிகள் வீசிய இளையர்கள்

கடலூர்: அமைச்சர் சம்பத் மேற்கொண்ட பிரசாரத்தின் போது அவர் மீது காலணிகள் வீசப்பட்டதால் கடலூரில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் திறந்த வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தபோது, இரு இளையர்கள் அவர் மீது காலணிகளை வீசினர். “ஐந்தாண்டுகளாக தொகுதிப் பக்கம் ஏன் வரவில்லை? ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?” என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இருவரையும் கண்டுகொள்ளாமல் அமைச்சர் சம்பத் அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்றார். எனினும் அவ்விரு இளை யர்களுடன் அதிமுக நிர்வாகிகள் சிலரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...
Load next