‘ஓட்டுக்கு நோட்டு’: குவியும் புகார்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சி யுள்ள நிலையில் ‘ஓட்டுக்கு நோட்டு’ தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. வாக் களிப்புக்கு முந்திய நாட்களில் அதாவது வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் பொது மக்களுக்குப் பணம் வழங்க அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்து வருவதாக தேர்தல் ஆணையத்திடம் தினமும் புகார் செய்யப்பட்டு வருகிறது.
இப்புகார்கள் அதிகரித்து வரு வதாகக் கூறிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திர மோகன், இதுவரை சென்னையில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத கள்ளப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையே, மாநிலம் முழு வதும் பறிமுதல் செய்யப்பட்டு வரும் கள்ளப்பணம் நூறு கோடியைத் தொடும் நிலையில் உள்ளது. நேற்று வரை 98 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
‘இவ்வளவு கள்ளப்பணமா?’ என்று அதிகாரிகளே வியக்கும் அளவுக்கு தமிழகத் தேர்தல் களத்தில் கோடிகள் புரளுகின் றன. ஐந்தாண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லின்போது 35 கோடி ரூபாயும் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது 25 கோடி ரூபாயும் பிடிபட்ட நிலையில், இத்தேர்தலில் நூறு கோடி என்பது இந்திய அளவில் சிக்கியுள்ள ஆக அதிகமான கள்ளப்பணம் ஆகும்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக மறைத்து வைக் கப்பட்டு இருப்பதாக வரும் புகார் களில் பெரும்பாலும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் பெரும்புள்ளிகளே சிக்குகின் றனர்.