ஸ்ரீதிவ்யாவின் மனம் கவர்ந்த சூரி

சூரியின் குணச்சித்திர நடிப்புக்கு ரசிகையாகிவிட்டதாகச் சொல்கிறார் இளம்நாயகி ஸ்ரீதிவ்யா. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் வந்து போகாமல், குணச்சித்திர ரீதியிலும் அவர் அசத்தலான நடிப்பை வழங்குவதுதான் அம்மணியை வெகுவாகக் கவர்ந்துள்ளது. வாங்கிய சம்பளத்துக்கு மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் சூரி வித்தியாசமானவர். கதையில் தனக்குரிய பகுதியைக் கேட்டுக் கொண்டு, அதை மெருகேற்றுவதுடன், சக கலைஞர்களுக்கு உதவும் வகையிலும் சில கருத்துக்களை முன்வைப்பார். அதனால்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களைக் கவர்கின்றன. மேலும், இயக்குநர்களுக்குப் பிடித்த நடிகராகவும் உள்ளார்," என்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்தப் பாராட்டைக் கேள்விப்பட்டது முதல் சூரிக்கு தலைகால் புரியவில்லை எனக் கேள்வி. ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்துள்ள 'மருது' படத்தில் சூரி குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!