மின்சாரத்தை துண்டித்து பணம் தரும் ஆளுங்கட்சி: எச்.ராஜா

சென்னை: மின் விநியோகத்தை வேண்டுமென்றே தடை செய்து, ஆளுங்கட்சியினர் பணப் பட்டு வாடா செய்து வருவதாக பாஜக தேசிய செயலரும் தியாகராய நகர் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தேர்தல் முடியும்வரை மின்வாரியத்தை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். வாக்களிக்க பணம் கொடுக் கும் கலாசாரத்தை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக அறிமுகப் படுத்தியதாகக் குற்றம்சாட்டிய அவர், திமுகவின் இந்த நடை முறையை முன்னெடுத்துச் செல்வ தில் இப்போது அதிமுக முதலிடத் தில் உள்ளதாக விமர்சித்தார்.

“‘போடுவோம் ஓட்டு... வாங்க மாட்டோம் நோட்டு’ என மக்களை உறுதிமொழி எடுக்கச் செய்து வாக்களிக்க பணம் வாங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஆனால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பணப் பட்டுவாடாவைத் தொடங்கியுள்ளன. “சென்னையில் கடந்த 10ஆம் தேதி இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின்தடையை ஏற்ப டுத்திவிட்டு வீடு, வீடாக ஆளுங் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். இது கண்டிக்கத் தக்கது,” என்று எச்.ராஜா சாடினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது