ராமகிருஷ்ணன்: திமுக, அதிமுகவால் ஊழலை ஒழிக்கவே முடியாது

நெய்வேலி: திமுக, அதிமுகவால் ஊழலை ஒழிக்கவே முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எந்தவித தவறுகளும் நடக்காது என உறுதியளித்தார். “அரசு நிர்வாகத்தில் தவறுகள் நடக்காத வண்ணம் நெறிமுறைக் குழு அமைத்து, அக்குழுவின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தப்படும்.

அதிமுக, திமுக கட்சிகளால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இவர்களுக்கு மாற்றாக ஒன்று வந்தால் மட்டுமே தமிழகத்தில் ஊழல் ஒழியும். அந்த மாற்றுதான் மக்கள் நலக் கூட்டணி,” என்றார் ராமகிருஷ்ணன். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கனிம வளங் கள் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் மணல் கொள்ளை அதிகரித்தது என்றார்.

Loading...
Load next