ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்த பாமக வேட்பாளர் கைது

கடலூர்: பாமக வேட்பாளர் தாமரைக்கண்ணனை காவல்துறையினர் கைது செய்ததால் கடலூர் தொகுதியில் பரபரப்பு நிலவியது. கடலூரில் அதிமுகவினர் நேரடியாகவே வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுப்பதாக தகவல் வரவே, அங்கு சென்ற பாமகவினர் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் பணம் முழுவதையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு கொண்டு வந்து கொட்டிய தாமரைக் கண்ணன், தனது கண்களைக் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைதானார். எனினும் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

“பண விநியோகத்தை தடுக்க வேண்டுமென பலமுறை தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதை பாமக வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி,” என்றார் தாமரைக்கண்ணன்.