லிபியாவில் சிக்கித்தவித்த 29 பேர் பத்திரமாக மீட்பு

கொச்சி: உள்நாட்டுப் போர் தீவிர மாக நடைபெற்றுவரும் லிபிய நாட்டில் சிக்கித்தவித்த கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 இந்தியர் கள் பத்திரமாக நேற்று காலை கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். நாடு திரும்பியவர்களை கேரள அதிகாரிகள் வரவேற்றனர். 29 பேரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 குடும்ப உறுப்பினர்களும் தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவர். இவர்களில் 11 பேர் குழந்தைகள்.

இவர்கள் லிபியாவின் சப்ரதா நகரில் உள்ள ஜாவியா மருத்துவ மனையில் பணிபுரிந்தவர்கள். மார்ச் மாதம் சப்ரதா நகரில் வசித்து வந்த கேரளத் தாதி ஒரு வரும் அவரது மகனும் பயங்கர வாதிகளின் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தங்களது குடும்பத்தினரை மீட்க இவர்கள் கோரிக்கை விடுத்தனர். சப்ரதா பகுதியில் வசித்து வந்த இவர்கள் லிபிய அரசு உதவியுடன் திரிபோலி கொண்டு வரப்பட்டனர். விசா இன்றி தவித்தஅவர்கள் மத்திய அரசின் உதவி யுடன் நேற்று தாயகம் திரும்பினர்.

உறவினர்கள் பலரும் தமது அன்புக்குரியவர்கள் பத்திரமாகத் திரும்பி வந்ததைக் கண்டு கொச்சி விமான நிலையத்தில் அவர்களைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டனர். விசா இன்றி தவித்த அவர்கள் மத்திய அரசின் உதவியுடன் நேற்று பத்திரமாகத் இந்தியா திரும்பினர். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது