வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவனின் குடும்பத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக=மக்கள் நலக்கூட்டணி=தமாகா ஆகியன இணைந்த கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷா நவாஸ் குன்னம் தொகுதி வேட் பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தொகுதி முழுவதும் சென்று வாக்கு வேட்டையாடி வரும் அவர், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட அங்கனூர் கிராமத்துக்குச் சென்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் குடும்பத்தார் வர வேற்பளித்தனர். திருமாவளவனின் தாயார், சகோதரர்கள் செங்குட்டுவன், பாரிவள்ளல் ஆகியோர் ஷா நவாஸை வரவேற்றதோடு மோதிரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கிராமத்தினரைக் கேட்டுக்கொண்டனர்.

குன்னம் தொகுதி வேட்பாளர் ஷா நவாஸுடன் (நடுவில்) திருமாவள வனின் தாயாரும் சகோதரர்களும். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது