இரட்டை விரலைக் காட்டியதால் அதிர்ச்சி

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, வெற்றியைக் குறிக்கும் வகையில் ஸ்மிருதி இரானி இரட்டை விரலைக் காட்டியதால் பாஜக வினர் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக இரு விரல்களைக் காட்டினால் அது வெற்றியின் சின்னம். அதனையே, தமிழகத்தில் காட்டினால் அது அதிமுக சின்னமான இரட்டை இலையைக் குறிக் கும். இது தேசிய அரசியலில் இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு தெரிந்திருக்க வாய்ப் பில்லை என்பதால் ஸ்மிருதியை அருகில் இருந்த தமிழிசை உரிமையோடு தடுத்து நிறுத்தினார். அதற்குப் பிறகு ஸ்மிருதி இரானியின் இரு விரல்களை மடக்கிய தமிழிசை, முழுவதுமாக கையசைக்கச் செய்தார். இதனால் அப்பகுதியில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இரட்டை விரலை மடக்கும் தமிழிசை. படம்: ஊடகம்