மது வாங்க அலைமோதும் கூட்டம்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் வாக்குப்பதிவு அமைதி யாக நடைபெற இன்று முதல் திங்கட்கிழமை வரையிலும் (மே 14, 15, 16) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது உடன் வரும் தொண்டர்களுக்கு பிரியாணியுடன் 500 ரூபாய் பணமும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று விடுமுறை நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இப்போதே வாங்கி வைக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாலை உச்சநேரத்தில் கூட்டம் அலைமோதுகிறது என்றும் அதிகமானோர் வாங்கிச் செல்வதால் பெரும்பாலான கடைகளில் மதுபானம் இருப்பு இல்லை என்றும் இணையச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!