ஸிக்கா தொற்று எதிரொலி: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வாட்டன் பேட்டை குடியிருப்பாளர் ஒருவருக்கு ஸிக்கா நோய்க் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப் பகுதியில் கொசு ஒழிப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று கொசுப் பெருக்கம் இருக்கிறதா என்ப தைக் கண்டறியும் சோதனை நடவடிக்கைகளும் கொசு ஒழிப்புப் புகைமூட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இப்போதைக்கு ஸிக்கா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பிரேசில் நாடுதான். இம்மாதம் 7ஆம் தேதி அங்குள்ள சாவ் பாலோ நகரில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 48 வயது நிரந்தரவாசி ஸிக்கா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புக்கிட் தீமாவில் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்களை முற்றிலும் அழிக் கும் நடவடிக்கைகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கி விட்டிருப்பதால் நேற்றுக் காலை வாட்டன் பேட்டை முழுவதையும் வெண்புகை சூழ்ந்திருந்ததைக் காண முடிந்தது.

நேற்றுக் காலை கொசு ஒழிப்பு புகைமூட்டம் போடப்பட்டதால் வாட்டன் பேட்டை பகுதி முழுவதும் புகை படர்ந்தது போலத் தோற்றமளித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்