கருணாநிதி: பிடிபட்ட ரூ.570 கோடி முறையற்ற பணம்

சென்னை: திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் கடந்த சனிக் கிழமை இரவு நடத்திய சோதனை யின் போது கோவையிலிருந்து ரூ.570 கோடியை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் பிடிக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து விசாகப்பட் டினத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட தாகக் கூறினர். இதுகுறித்து, தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் ஜெயந்தி தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 570 கோடி ரூபாயும் முறையற்ற பணம் என்று கூறி யுள்ளார். மேலும் அவர் பல கேள்விகளையும் அடுக்கியுள்ளார். "ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும் 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால் அதற்கு எவ் வளவு பாதுகாப்பு இருக்க வேண் டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. அப்படி இருக்கும்போது 570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற போது, லுங்கி அணிந்த காவல் துறையினரை எப்படி அழைத்துச் சென்றார்கள்?

"ஒரு வங்கியிலிருந்து இன் னொரு வங்கிக்கு இவ்வளவு பணத்தை அனுப்புவது என்றால், அந்தப் பணத்திற்கும், கன்டெய்ன ருக்கும் சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அப்படி எதுவும் வைக்கப்படவில்லையே? பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்? இவ்வளவு பெரிய தொகையை விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று எடுத்துச் சென்றதற்கு என்ன காரணம்?

"எந்த வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லப்படுகிறதோ அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் ஒருவர் கண்டெய்னருடன் சென்றிருக்க வேண்டாமா?

திருப்பூரில் பணம் பிடிபட்டு 18 மணி நேரம் கழித்தே கோவை வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோருகிறார்கள் என்றால் அபரிமிதமான இந்தத் தாமதத் திற்கு என்ன காரணம்? தமிழகத் தில் இவ்வளவு பெரிய தொகை கடத்தப்பட்டபோது உண்மையான விவரங்கள் என்ன என்பது பற்றி இதுவரை தமிழக அரசின் சார்பில் யாரும் எந்த விவரமும் தெரி விக்காமல் இருப்பதில் இருந்தே முறையான வழியில் வந்த நேர்மையான பணம் அல்ல என்பது உறுதியாகிறது அல்லவா?," என்று கருணாநிதி வினவியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!